
அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் புலமை ஒலி இளங்கோ விழா துன்னாலை அல்லையம்பதி வடிவேலர் மணி மண்டபத்தில் சதாவதானி தாத்தா கந்தமுருகேசனார் அரங்கில் நேற்று(23) ஆரம்பமானது.
நேற்றைய அரங்க தலைவராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகவியல் துறை முதுநிலை விரிவுரையாளர் ராஜேஸ்கண்ணா தலமையில் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமானது.
இதில் மங்கல சுடர்களை சுகுமாரன் அன்புமதி தம்பதிகள், மற்றும் விஸ்வப் பிரம்மசிறி கோபாலகிருஸ்ணன் காயத்திரி ஆகியோர் ஏற்றினர்.

தொடர்ந்து ஆசி உரையை கவிதாசிரோமணி சிவகச்தி சிறி கலாநிதி ராம்தேவ லோகேஸ்வரக் குருக்கள் நிகழ்த்தினார்.
வாழ்த்துரையை யாழ் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி அதிபர் கிருஸ்ணலதா குலசங்கர் நிகழ்த்தினார். தொடர்ந்து தலைமை உரையை நிகழ்வின் அரங்க தலைவரும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகவியல்துறை விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணா நிகழ்த்தினார்.தொடக்க உரையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் த.அஜந்தகுமார் நிகழ்த்தினார்.
தொடர்ந்து வசந்தகுமாரி கதிரவேற்பிள்ளை கலைஞான கேசரி க.பரஞ்சோதி ஞாபகர்த்த புலமை ஞான ஒலி விருது யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. கம்பவராதி இ.ஜெயராஜ், புலமை ஞான ஒலி விருது வழங்கி கௌரவித்தார்.

தொடர்ந்து எமது தேசத்தை கட்டியெளுப்ப பெரிதும் தேவையானது உயர்ந்த அறமே அல்லது தெளிந்த அறிவே எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் திருமதி கோசலை மதன் தலைமையில் விவாத அரங்கமும், அகில இலங்கை கம்பன் கழக தலைவர் நடுவராக பங்குகொண்ட “இளங்கோவடிகள் தன் காப்பியத்தினுள் பெரிதும் வலியுறுத்தும் பாவிகச் செய்தி” எனும் தலைப்பின்கீழ் “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” எனும் தலைப்பில் வலம்புரி ந.விஜயசுந்தரம், ச.அன்ரனி ஆகியோரும், “உரைசால் பத்தினியை உயர்த்தோர் ஏத்துவர்” பேராசிரியர் தி.வேல்நம்பி, க.வாணிமுகுந்தன் ஆகியோரும், “ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்” எனும் தலைப்பில் பேராசிரியர் சிறீபிரசாந்தன், மற்றும் சி.குமரேசன் ஆகியோரும் வாதிட்டனர்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், புத்திஜீவிகள், கலைஞர்கள் இலக்கியவாதிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் புலமை ஒலி விழா இன்றும், நாளையும், பிற்பகல் நான்கு மணியிலிருந்து துன்னாலை வடிவேலர் மணி மண்டபத்தில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.