Jaffna
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொதிகளை வழங்கியது சந்நிதியான் ஆச்சிரமம்!

யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமம் சமைத்த உணவுப் பொதிகளை இன்று(27) வழங்கியது.
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குருநகர் மற்றும் சங்கிலியன்தோப்பு பகுதிகளில் வசிக்கும் 350 பேருக்கு சமைத்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று குறித்த உணவுப் பொதிகளை வழங்கினார்.