EducationNewsSri LankaTrinco
Trending

கிழக்கு மாகாண கல்விச் செயலாளரின் வருகையும் சிநேகபூர்வமான கலந்துரையாடலும்

நாடளாவிய ரீதியில் அதிகரித்து கொண்டு வரும் கொரோனா தொற்று காரணமான பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் முடக்கப்பட்டு இருப்பதனால் , இதனை ஓரளவுக்கேனும் நிவர்த்தி செய்வதற்காக எமது கபிலர் சமூதாய மேம்பாட்டுப் பேரவையானது நிகழ்நிலை (Online) மூலமான இலவச மெய்நிகர் வகுப்புக்களை தரம் 3 தொடக்கம் 13 வரையான மாணவர்கள் மற்றும் சகல அரச போட்டிப் பரீட்சைக்குமான மொழித்திறன் மற்றும் நுண்ணறிவு வகுப்புக்களை நடத்தி வருகின்றது.

இச் செயற்பாட்டினை மேலும் ஊக்கப்படுத்தும் முகமாக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் திரு M.C.L Fernando ஐயா மற்றும் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் நேற்று (2021.06.16) எமது கபிலர் சமூதாய மேம்பாட்டு நிறுவனத்தின் அலுவலகத்திற்கு நேரடியான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இவ் விஜயத்தில் எமது நிறுவனத்தின் கல்விசார் செயற்பாடுகளை நேரடியாக அவதானித்தது மட்டுமின்றி கல்வி அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக மேலும் பல ஆலோசனைகளை வழங்கினார்கள்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் க.பொ.த உயர்தர கணித¸ விஞ்ஞான பிரிவு மாணவர்களின் அடைவு மட்டத்தினை அதிகரிப்பதற்கான விசேட மெய்நிகர் (Zoom) வகுப்புக்களை நடாத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் திரு.K.சித்திரவேல் அவர்களும்¸ உதவிச் செயலாளர் திரு.A.G.பஷால் அவர்களும் ¸ பிரதி கல்விப் பணிப்பாளர் திரு.S.சுதர்சன் மற்றும் திருகோணமலை கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.S.சிறிதரன் ஐயா அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Kapilar SAC

Our Kapilar Social Advancement Council has been based in the Trincomalee District of the Eastern Province for the past two years. We are providing school Education program, legal Education and Vocational education aimed at improving the education of Tamil Students ​​in the East. We, the Kapilar Advancement Council, are operating as an Educational institution in the Trincomalee District with the main objective of improving the education of students in the North-Eastern and Upcountry Areas. Over the past few years, we have been implementing a number of educational programs aimed at making a huge difference in the education of students, especially in disadvantaged areas. We run a variety of educational programs, especially free evening classes for underprivileged students, assistance programs for underprivileged students at school, assistance programs for schools in backward villages, and assistance programs for underprivileged family students who have gone to universities. If such educational needs are found in your area, we are ready to provide the service to the students. Contacts: - The Director Kapilar Social Advancement Council No. 17, Kannakipuram, Uvarmalai, Trincomalee. Telephone No:- +9426-2052000 +9477-3520730 WhatsApp:- +9476-0037179 E-mail :- info@Kapilarsac.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button