Covid-19 Help CenterHealthLife StyleNewsWorld

2021ஆங்கிலப்புத்தாண்டில் தடுப்பூசி மருந்து பயன்பாட்டிற்கு வந்தாலும் 2021 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு வரை மீட்சிக்கு காத்திருப்போம்.(கணிப்பு)

(செய்திகள்)

கொரோனா தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காணத் தொடங்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில், இணையவழியில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி சோதனைகளின் முடிவுகள் நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளன.

எனவே கொரோனா தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காண தொடங்கலாம்.

கொரோனா தடுப்பூசி விநியோகத்தின் போது ஏழை நாடுகளை, பணக்கார மற்றும் சக்தி வாய்ந்த நாடுகள் மிதித்து விடக்கூடாது.

கொரோனா தொற்று அதன் மிகச்சிறந்த மற்றும் மிக மோசமான பக்கத்தை மனித குலத்துக்கு காட்டியுள்ளது.

இரக்கம், சுய தியாகத்தின் ஊக்கம் அளிக்கும் செயல்கள், விஞ்ஞானம் மற்றும் புதுமையின் மூச்சடைக்கக்கூடிய சாதனைகள் மற்றும் ஒற்றுமையின் இதயத்தை தூண்டும் நிகழ்வுகளையும் கூட காட்டியுள்ளது என்றார்.


கொரோனா தடுப்பூசிக்கான மருந்தை ரஷ்யாவில் உள்ள ‘காமேலி இன்ஸ்டியூட் ஆப் எபிடெமியோலஜி மற்றும் மைக்ரோ பயாலஜி’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய 17 கோடி கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் செச்செனோவ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஜூன் 18ம் தேதி இப்பல்கலைக்கழகத்தில் தடுப்பூசி பரிசோதனையின் முதல் கட்டம் தொடங்கப்பட்டது. இதையடுத்து, இரண்டாவது கட்ட பரிசோதனையாக, ஜூன் 23ம் தேதி தடுப்பூசி வழங்கப்பட்டது.

இதன் முடிவில், கொரோனாவுக்கான தடுப்பு ஊசியைக் கண்டுபிடித்து, மனிதர்களுக்கு செலுத்தி முதற்கட்டமாக வெற்றி கண்டுள்ளதாக, செச்செனோவ் பல்கலைக்கழகம் சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

இதுகுறித்து செச்செனோவ் பல்கலைக்கழக மையத்தின் தலைவரும், தலைமை ஆராய்ச்சியாளருமான எலெனா ஸ்மோல்யார்ச்சுக் கூறுகையில், தன்னார்வலர்கள் மீதான தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாகவும், ஆய்வு டேட்டாக்களை வைத்து பார்த்தால், தடுப்பூசி பலன் தந்துள்ளதாகவும், மேலும் தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை இது நிரூபித்தது என்றும் தெரிவித்திருந்தார்.


வாஷிங்டன்: கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி உற்பத்தியின் முக்கிய திருப்பமாக, மூன்றாவது கட்ட தடுப்பூசி பரிசோதனையின்போது 90 சதவீதம் பேருக்கு வெற்றிகரமாக அது பலன் கொடுத்துள்ளது என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஃபைசர் மற்றும் ஜெர்மனி கூட்டாளியான பயோஎன்டெக் அறிவித்துள்ளன. கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்பில் உலகின் பல்வேறு நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. இங்கிலாந்து நாட்டின், ஆக்ஸ்போர்டு தடுப்புமருந்து, அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன், மாடர்னா உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட மருந்து நிறுவனங்கள், மூன்றாவது கட்ட பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் நியூயார்க்கைச் சேர்ந்த ஃபைசர் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

90 சதவீதம் வெற்றி அந்த நிறுவனம் நடத்திய மூன்றாவது கட்ட பரிசோதனையில், மருந்திலிருந்து 90 விழுக்காடு வெற்றி கிடைத்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது. அவசரகால பயன்பாட்டுக்காக இந்த மாதம் முதலே இதை பயன்படுத்துவதற்கு அமெரிக்க நிர்வாகத்திடம் அனுமதி கேட்க உள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. 16 முதல் 85 வயதுக்கு உட்பட்டோர் இடம் இந்த தடுப்பூசியை செலுத்தி பயன்படுத்துவதற்கு அனுமதி கேட்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித குலத்திற்கு சிறப்பான நாள் இந்த மருந்து எவ்வளவு காலத்துக்கு கொரோனாவை தடுக்க பயன்படும் உள்ளிட்டவை பற்றி இன்னும் தகவல் வெளியாகவில்லை. இது பற்றி அந்த நிறுவனத்தின் தலைவர் ஆல்பர்ட் கூறுகையில், அறிவியல் மற்றும் மனித குலத்துக்கு இது ஒரு சிறப்பான நாள். எங்களது தடுப்பூசி தயாரிப்பு பணியின் முக்கியமான கட்டத்திற்கு வந்து சேர்த்துள்ளோம். பக்க விளைவுகள் இல்லை உலகமே இந்த தடுப்பூசிக்காக ஏங்கும் இந்த காலகட்டத்தில், மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழியும் இந்த காலகட்டத்தில், பொருளாதாரம் பாதிப்படைந்துள்ள இந்த காலகட்டத்தில், எங்களின் தடுப்பூசி வெற்றி பெற்றுள்ளது என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இதுவரை 6 நாடுகளில், 43 ஆயிரத்து 500 பேருக்கு இந்த தடுப்பூசியை போட்டு பரிசோதனை செய்துள்ளோம். இந்த தடுப்பூசி காரணமாக பெரிய பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கைதரும்நல்லசெய்தியைத்திரட்டித்தருவது:
சுவிஸ்சுரேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button