
அனைவருக்கும் வணக்கம், நான் கஜன் பேசுகிறேன், இது ஓர் அவசர வேண்டுகோள். உலகமெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கான கோரிக்கையாக இதை நான் முன்வைக்கிறேன். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தற்போது உருவாகியிருக்கும் தமிழ்க்கல்வி சார்ந்த பிரச்சனை தொடர்பாகவே உங்கள் முன் வந்திருக்கிறேன். நீண்டகாலமாக பிரான்சு நாட்டிலிருந்து உருவாக்கப்பட்டு செயற்படுவது தமிழ் கல்விப் பேரவை என்ற அமைப்பாகும். இந்த அமைப்பினுடைய பாடநூல்களே பிரான்சிலிருந்து அச்சடிக்கப்பட்டு உலகெங்கும் வழங்கப்பட்டு வந்தது. இந்தப்பாடநூலை வெளியிட்டுவந்த பொறுப்புக்குரியவர்களது நிர்வாகசீர்கேடுகள் மற்றும், பணமோசடிகள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, புதிதாக உருவாகியிருக்கும் அனைத்துலக தமிழர் கல்விப் பேரவை (ICEDT ) என்ற அமைப்பினால் புதிய பாடநூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப்புதிய பாடநூலில் ´திட்டமிட்ட இன அழைப்பினை மேற்கொள்ளும் விதமாக , முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னதான மாபெரும் திட்டமாக வரலாற்றை படுகொலை செய்யும்நோக்கில் பாடங்கள் எழுதப்பட்டுள்ளன. வரலாறு, கலை ஆகியவற்றையும் அழிப்பது இன அழிப்பின் ஒரு பகுதியே. இப்பாடநூலில் உள்ள வரலாற்றுத் திரிபுகள் உலகெங்கும் வாழும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களால் அடையாளம் காணப்பட்டு அறிக்கைகளாக வெளியிடப்பட்டுள்ளன.
அதைவிடவும்; இப்பாடநூல் மீளப்பெறப்பட்டு, நேர்த்தியான வரலாற்றுப் பாடநூல் வெளியிடப்பட வேண்டுமென வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டமும் யேர்மனியில் இருந்து முன்னெடுக்கப்பட்டது. அதைவிடவும் யேர்மனியில் இப்பாடநூல் மீளப்பெறப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி ஒன்றுகூடல்களும் நடைபெறுகின்றன. ஆனாலும்; திரிபுபடுத்தப்பட்ட பாடநூலை வெளியிட்ட அமைப்பினரோ அல்லது இதற்குப் பொறுப்பானவர்களோ இதுதொடர்பில் எவ்வித பதிலையும் தெரிவிக்காமல் தனித்தனியே வெவ்வேறு விதமான பதில்களைக் கூறிவருகிறார்கள் . எங்களுடைய இனம், மொழி, வரலாறு காக்கப்படவேண்டும் என நாம் போராடி வருகின்ற வேளையில், சிங்கள அரசின் திட்டமிட்ட பாடத்திட்டம் இதற்குள் புகுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இப்பாடத்திட்டத்தை உருவாக்கியவர்கள் ஒரு சில பிழைகள் தவிர்ந்த வேறெதுவும் இல்லை எனக் கூறி வருகிறார்கள். இதன்காரணமாக தமிழ்ப்பாடசாலைகள் இரண்டாகப் பிளவுறும் வாய்ப்புகளே அதிகம். ஒரே நாட்டுக்குள்ளே இரண்டு பாடத்திட்டங்கள் மூலம் புலம்பெயர்ந்த தமிழர்களைப் பிளவுபடுத்தும் வேலைத்திட்டங்களே இவையாகும்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக நான் என்னை அர்ப்பணிக்கவுள்ளேன். 1985 ஆம் ஆண்டிலிருந்து நான் இந்த விடுதலைப்போராட்டத்தில் பங்குகொண்டுவருகிறேன். இன்று எனது கோரிக்கை யாதெனில்; ஏற்கனவே இயங்கி வருகின்ற தமிழ்க்கல்விப் பேரவை (பிரான்சு) அமைப்பினரும், புதிதாக உருவான ICEDT எனப்படும் அனைத்துலகத் தமிழர் கல்விப் பேரவை என்ற அமைப்பினரும் நேருக்கு நேர் கலந்துரையாடி, பிளவைத் தடுத்துநிறுத்தவேண்டும். அனைத்து நாட்டு ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர்களும் ஒன்றாகக்கூடி இதற்குரிய தீர்வைக்காண வேண்டும்.
இது விளையாட்டல்ல, எமது இனத்தின் விடுதலை சம்பந்தப்பட்ட விடயம்.
சம்பந்தப்பட்ட விடயம். ஆதலால் இது தொடர்பாக அனைவரும் இணைந்து நேர்த்தியான வரலாற்றை எமது சந்ததிக்கு எடுத்துச் செல்ல ஆவன செய்யவேண்டும். மக்களையே ஓரங்கட்டி இங்கே எதையும் செய்யமுடியாது.
இதற்குரிய பொறுப்பானவர்கள் இவ்விடயங்களைக் கருத்திற்கொண்டு செயற்படவேண்டி, எதிர்வரும் வியாழக்கிழமை 14.10.2021 வரை கால அவகாசம் தருகிறேன். அதற்குள் இப்பாடப்புத்தகம் தொடர்பாக முடிவுகள் எட்டப்படாவிட்டால், 14.10.2021 அன்று நான் உண்ணாநோன்பை ஆரம்பிக்கவிருக்கிறேன் என்பதை அனைவருக்கும் அறியத்தருகிறேன். முற்றுமுழுதான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தை நான் ஆரம்பிப்பதற்கு முன்பாக இதற்குரியவர்களுக்கு நான் கால அவகாசம் தந்திருக்கிறேன். அனைவரும் பிரான்சு நாட்டில் ஒன்றுகூடவேண்டும். இதற்குரிய தீர்வு எட்டப்படவேண்டும். அனைவரும் ஒன்றுகூட முற்படும் பட்சத்தில் அனைவருக்குமுரிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதிசெய்யப்படும்.
எமது தலைவர் தமிழ் மக்களுடைய விடுதலைக்காகப் போராடியவர். தலைவர் எமது இனத்திற்காக தனது குடும்பத்தையே தியாகம் செய்துள்ளார் இனியாவது நாம் அனைவரும் இந்த இடத்தில் ஒன்று திரண்டு போராடவேண்டும். பாடப்புத்தகத்தில் கையை வைத்துவிட்டு, அதை நியாயப்படுத்துவதைவிடுத்து இப்புத்தகம் தவறானது அடையாளம் காணப்படும் நிலையில் இப்புத்தகங்கள் முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளேன்.
அன்புடன் (மனித உரிமை செயல்பாட்டாளர் ம. கஜன்)
வணக்கம் உலகளாவிய ரீதியில் மக்கள் தமது தனிப்பட்ட ரீதியில் அனைத்து திறமைகளையும் நீங்களாகவே பதிவு செய்துகொள்ளும் ஒரு இணையத்தளம் https://tamilinfo.net/news/register/ உலகம் முழுவதும் உங்கள் சமய, சமூக, கலை, கலாச்சார, கல்வி, இலக்கியம், கவிதை, கதை,கட்டுரை, செய்திகள், உங்கள் கருத்துக்களையும், தமிழ் மொழி நிகழ்வுகளும், மற்றும் உங்கள் குறும்படங்கள், பாடல்கள் தனிப்பட்ட ரீதியில் அனைத்தையும் நீங்களே பதிவு செய்துகொள்ள முடியும்….
1.இணைய பக்கத்தில் Log in செய்து கொள்ள வேண்டும்.
2.உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
3.உங்கள் பதிவுப் பெயர் மற்றும் கடவு இலக்கம் என்பதை நீங்கள் பதிவு செய்து கொள்ளுங்கள்.
4.பதிவு செய்தவர் பெயர், கடவு இலக்கம் மூலமாக நீங்கள் உங்கள் அனைத்து பதிவுகளையும் பதிவிட முடியும். ( உங்களுக்கு பயீட்ச்சி தேவைப்பட்டல் தொடர்பு கொள்ளுங்கள் info@tamilinfo.net (இலவசம் ) )