யாழ்ப்பாணம் – தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாட்டி மாதா தேவாலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து பொது ஈகைச்சுடரை மாவீரரின் தந்தையான பிரான்சிஸ் சேவியர் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கு சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னாள் போராளிகள் அரசில்வாதிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.
மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு யாழ்.கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் இன்று இடம் பெற்றது.
பொதுச்சுடரை மூன்று மாவீரர்களின் தந்தை கந்தசாமி ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஏனைய தீபங்கள் ஏற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவஞ்சலிக்கு வருகைதந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
மாவீரர் வாரத்தின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி கிழக்கு குடத்தனையிலும் இன்று இடம்பெற்றது.
முதலில், சிவப்பு மஞ்சள் கொடி ஏற்றப்பட்டது. கொடியை மாவீரர் றதிகலாவின் தந்தை கே.கனகரத்தினம் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து பொதுச் சுடரை மாவீரரின் தாயார்இராசசுந்தரம் சின்னக்கிளி ஏற்றிவைத்தார்.
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல முன்றலிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
இரண்டு மாவீரர்களின் தாய் பொது சுடரேற்ற, மாவீரர்களின் உறவுகளும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.