Uncategorized
Trending

புலனாய்வின் தந்தை” மாதவன் மாஸ்டர் அண்ணாவின் 64ஆவது அகவை

இன்று உலக வல்லரசுகளை வியக்கவைக்கும் உன்னதத் தமிழர்ப் படையின் “புலனாய்வின் தந்தை” மாதவன் மாஸ்டர் (இயற்பெயர் ரகுநாதன்) அண்ணாவின் 64ஆவது அகவை தினத்தில் எனது மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்…! 🐯❤️‍🔥🐅

எமது விடுதலை இயக்கத்தின் புலனாய்வுத்துறைப் பெருவளர்ச்சிக் கண்டு உலகை அதிசயிக்கவைத்த அனைத்து வெற்றிகளின் பின்னாலும் மாதவன் மாஸ்டரும் வெளியில் தெரியாத வேராக இருந்தார்…! தான் நேசித்த மண்ணின் விதையாக வீழ்ந்துள்ளப் பிரிகேடியர் மாதவன் மாஸ்டர் அவர்களால் வளர்க்கப்பட்டப் புலனாய்வுத்துறைப் போராளிகள் பலரை (தமிழ்த்தேசியத்தலைவரின் கட்டளைக்கு இணங்க) முள்ளிவாய்க்காலில் இருந்துக் கடுமையான முயற்சிகளின் ஊடாகப் பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டு, இறுதிவரை முள்ளிவாய்க்காலில் நின்றுக் களமாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது…!
💥💯💥

எனவே, எமது விடுதலைக்காக விதையாக வீழ்ந்தவர்களின் வரலாறுகளை எமது அடுத்தத் தலைமுறைக்கும் பதிந்துவைக்கும் கடமையுணர்ந்து முள்ளிவாய்க்காலில்ச் சிங்களத் தீவிரவாத இனவழிப்பு இராணுவத்துடன் இறுதிவரைக் களமாடி வீரச்சாவடைந்த இந்த வீரமறவனை நாங்கள் என்றென்றும் நெஞ்சில் நிறுத்திப் பூசிப்போம்…! 💥❤️‍🔥🥰

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button