News
Trending
மனைவி மற்றும் மாமியாருடன் ஏற்பட்ட பிரச்சினையில், அவர்களை வாளால் வெட்டிய நான்கு பிள்ளைகளின் தந்தை

மனைவி மற்றும் மாமியாருடன் ஏற்பட்ட பிரச்சினையில், அவர்களை வாளால் வெட்டிய நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரி தீயில் எரியுண்டு உயிரிழந்துள்ளதாக மொனராகலை மஹகளுகொல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீக்காயங்களுடன் மொனராகலை வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்ட இந்த நபர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
38 வயதான எம்.டப்ளியூ. ஞானசிறி லக்ஷ்மன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
வெட்டுக்காயங்களுக்கு உள்ளான மனைவி மற்றும் மாமியார் ஆகியோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.