Life StyleSports

‘தமாஷா பேசுறதா நினைச்சு’… ‘வம்பில் மாட்டிக்கொண்ட வைஸ் கேப்டன்’… ‘வெளுத்து வாங்கும் ரசிகர்கள்’…!!!

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் காயம் குறித்து, இந்திய அணியின் துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் கூறியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. முதல் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, நேற்றைய போட்டியிலும் 51 ரன்கள் வித்தியாசத்தில், வென்ற ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அதிரடியாக 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில், கடந்த இரு போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி 69, 83 ரன்களை எடுத்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், நேற்றைய போட்டியின் இடையில் காயமடைந்தார். போட்டியின் 4-ம் ஓவரில் இந்திய வீரர் தவான் அடித்த பந்தை தடுக்க முற்படுகையில், அவருக்கு இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் வலியால் துடித்த அவர், இதையடுத்து ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டித் தொடரில் இருந்து விலகியுள்ளார். வரும் 17-ம் தேதி நடைபெறும் டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பது கடினம் என்றும் கூறப்படுகிறது.

KL Rahul criticised on Twitter after his remarks on Warner's injury

இந்நிலையில், போட்டியின் முடிவில் இந்திய அணியின் துணைக்கேப்டனான கே.எல்.ராகுலிடம் இதுகுறித்து கேள்வியெழுப்புகையில், “அவரது காயத்தின் தன்மை குறித்து நமக்குத் தெரியவில்லை. அவரது காயம் நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்தால் நன்றாக இருக்கும். ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான வீரர் அவர். ஒருவருக்கு எதிராக இவ்வாறு விரும்புவது சரியல்ல. அவர் குணமடைய நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டால் அது எங்கள் அணிக்கு நன்மை பயக்கும்” எனக் கூறினார்.

இதையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் கே.எல். ராகுலை ட்விட்டரில் விளாசி வருகின்றனர். தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றிபெற நினைக்காமல், எதிரணியினருக்கு காயம் ஏற்பட்டது நல்லது என்று கூறுவது நியாயமல்ல என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். எங்கே போனது உங்களது ஆட்டத்திறமை என்றும், நகைச்சுவை என்ற பெயரில், அடுத்தவரின் காயத்தில் வெற்றிபெற நினைப்பது தவறு என்றும் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button