யாழ்ப்பாணத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தால், 12,970 குடும்பங்களைச் சேர்ந்த 43,682 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
மேலும்,03 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், 129 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் 66 தற்காலிக இடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
1,634 குடும்பங்களைச் சேர்ந்த 5,793 பேர் இவ்வாறு தற்காலிக பாதுகாப்பு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 1,303 குடும்பங்களை சேர்ந்த 4,156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் 464 குடும்பங்களைச் சேர்ந்த 1,781 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில், 829 குடும்பங்களை சேர்ந்த 2,904 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நல்லூர் பிரதேச செயலர் பிரிவில், 1,090 குடும்பங்களை சேர்ந்த 3,574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில், 1,359 குடும்பங்களை சேர்ந்த 4,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 2,164 குடும்பங்களைச் சேர்ந்த 7,187 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காரைநகர் பிரதேச செயலர் பிரிவில், 215 குடும்பங்களைச் சேர்ந்த 764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில், 901 குடும்பங்களைச் சேர்ந்த 3,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில், 1,240 குடும்பங்களைச் சேர்ந்த 4,023 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில், 1,618 குடும்பங்களைச் சேர்ந்த 620 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடுவில் பிரதேச செயலர் பிரிவில், 311 குடும்பங்களை சேர்ந்த 1,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில், 339 குடும்பங்களை சேர்ந்த 1,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலனை பிரதேச செயலர் பிரிவில், 545 குடும்பங்களை சேர்ந்த 1,866 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில், 286 குடும்பங்களை சேர்ந்த 967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில், 306 குடும்பங்களைச் சேர்ந்த 909 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.