அம்பாறை மாவட்டம் கல்முனை – சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் பின் வீதியில் பாதையை விட்டு விலகிய சொகுசு கார் ஒன்று நீரில் பாய்ந்ததில் சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (27) முற்பகலில் இடம்பெற்றது.
கார் நீரில் முற்றாக மூழ்கிய நிலையில் 40 நிமிடங்களுக்கு மேலாக மீட்பு தொண்டர்களின் போராட்டத்திற்கு பின்னர் கார் கரைக்கு கொண்டுவரப்பட்டது.
காருக்குள் இருந்த மூவரும் அம்பியூலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இருந்தபோதிலும் மூவரும் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
62 வயதுடைய கணவனும், 59 வயதுடைய மனைவியும், 06 வயதான பேரப்பிள்ளையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


மாணவர்களுக்கு கல்வி உதவியைப் பெற்றுக்கொடுக்க புதிய வங்கிக் கணக்குகள் அறிமுகம்!
திருக் கார்த்திகை விளக்கீடு