சேதமான மின்கம்பி அமைப்பை சரிசெய்ய அவசர பணிகள் தீவிரம்!‎

மோசமான வானிலை காரணமாக, ரந்தம்பே – மஹியங்கனையை இணைக்கும் 132,000 வோல்ட் இரட்டை மின்கம்பி பரிமாற்ற அமைப்பின் 15வது மின் பரிமாற்ற கோபுரம் (Transmission Tower) தரையில் விழுந்ததால், மஹியங்கனை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அவற்றை சூழ்ந்த பகுதிகளில் மின்விநியோகம் தடைப்பட்டிருந்தது.

நீர்மட்டம் குறைந்ததும், இலங்கை மின்சார சபையின் அனைத்து பிரிவுகளினதும் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ரந்தெனிகல–ரந்தம்பே மின் நிலைய ஊழியர்கள் இணைந்து தற்காலிக மின் பரிமாற்ற கோபுரத்தை அமைத்து, பகுதியளவில் சேதமடைந்த கேபிள் பாதையையும் சரிசெய்து, இரட்டை மின்கம்பி பரிமாற்ற அமைப்புக்கு விரைவில் மின்சாரம் வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version