இலங்கைவடக்கு மாகாணம்

அனர்த்த கால குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய குருதிக்கொடை!

அனர்த்த கால குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக குருதிக் கொடை முகாம் யாழ்ப்பாணத்தில் இன்று(08) நடைபெற்றது.

தேசிய புத்திஜீவிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் இன்று காலை 8.00 மணிமுதல் 3.00 மணிவரை இந்த குருதிக் கொடை முகாம் நடைபெற்றது.

குருதி நன்கொடை நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் சிறீபவானந்தராஜா, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button