
தெஹிவளையில் புகையிரத பாதையைக் கடக்க முயன்ற தம்பதியினர், கொழும்பு கோட்டையிலிருந்து அலுத்கமை வரை பயணிக்கும் புகையிரதத்துடன் மோதி உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (04) மாலையில் இடம்பெற்றதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை, பதுளபிட்டிய பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஆண் மற்றும் 59 வயதுடைய பெண் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் களுபோவில வைத்தியசாலைப் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.