
பனை சார் கைப் பணியாளர்களை கெளரவித்து சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, யாழ். கைதடியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று(18) இடம்பெற்றது.
பனை அபிவிருத்திச்சபைத் தலைவர் வி.சகாதேவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக பெருந்தோட்டப் பிரதி அமைச்சர் சு.பிரதீப் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது, பனை அபிவிருத்திச் சபைப் பணியாளர்களின் குறை-நிறைகளை கேட்டறிந்ததோடுபனை சார் கைப் பணியாளர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதேவேளை,பனைசார் உற்பத்தியாளர்கள் மற்றும் பனம் பொருள் ஏற்றுமதியாளர்கள் ஆகியோருடனான கலந்துரையாடல் ஒன்றும் இன்று கைதடியில் இடம்பெற்றது.
இதன்போது பனை சார் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தாம் எதிர்நோக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சந்திப்பில், பெருந்தோட்ட பிரதி அமைச்சர் சு.பிரதீப், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.