
வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் “சிவாலயங்களின் வழித்தடம்” என்ற சிறப்பு நூல் வெளியீடும், சுற்றுலாத்துறையின் சிறப்பம்சங்களை வெளிப்படுத்தும் இறுவெட்டும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
யாழ். கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலக கேட்போர் இந்த நிகழ்வு நேற்று (28) இடம்பெற்றது. நிகழ்வில்”சிவாலயங்களின் வழித்தடம் நூலை வடக்கு மாகாண சுற்றுலா பணியக தலைவர் அ. பத்திநாதன் வெளியிட்டுவைக்க வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
சுற்றுலாத்துறையின் சிறப்பம்சங்களை வெளிப்படுத்தும் இறுவெட்டை விருந்தினர்கள் இணைந்து வெளியிட்டு வைத்தனர்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ஸ்ரீ சாய் முரளி, வடமாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம.பிரதீபன், மன்னார் மாவட்ட செயலாளர் கனகேஸ்வரன், துறைசார் அதிகாரிகள், ஆலய அறங்காவலர்கள், விடுதிகளின் உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர.