
இலங்கை தமிழரசுக் கட்சியின் உடுப்பிட்டித் தொகுதி உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களை தெரிவு செய்யும் ஆலோசனைக் கூட்டம் மந்திகை மடத்தடியிங் அமைந்துள்ள வடமராட்சி தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று(19) மாலை இடம்பெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டம், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
எம்.ஏ. சுமந்திரன், பொதுச் செயலாளராக நியமனமாகிய பின்னர் இடம்பெறும் முதலாவது கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இதுவாகும்.
இதன்போது கட்சியின் ஆதரவாளர்களால் எம்.ஏ. சுமந்திரன், பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டார்.