FoodsNewsSrilanka News
இலங்கையில் ஜூன் 10 வரை உப்பு இறக்குமதிக்கு அனுமதி!

இலங்கையில் இறக்குமதிக் கட்டுப்பாட்டை தளர்த்தி உப்பு இறக்குமதிக்காக அனுமதி வழங்குவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜூன் மாதம் 10ஆம் திகதி வரை அவ்விறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கைத்தொழிலுக்கு அவசியமான அயடீன் கலக்காத உப்பு மற்றும் உணவுக்கு எடுக்கும் அயடீன் கலந்த உப்பு ஆகியவற்றை இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.