
பொங்கல் பண்டிகை 2025 முன்னிட்டு, சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14ம் தேதி முதல் கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. பொங்கலை முன்னிட்டு தொடர் விடுமுறை கிடைக்கிறது. எனவே வெளியூர்களில் தங்கி இருக்கும் மக்கள் சொந்த ஊர் செல்ல திட்ட மிட்டு இருப்பர்.

இதனால் பொதுப் போக்குவரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும். எனவே கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படும். ரயில்வே நிர்வாகம் சார்பில் முக்கிய வழித் தடங்களில் சிறப்பு ரயில்கள் பண்டிகை காலங்களில் இயக்கப்படும்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

பயணியரின் தேவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு, தாம்பரம் – திருநெல்வேலி, தாம்பரம் – கன்னியாகுமரி, சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில், சென்ட்ரல் – மானாமதுரை, எழும்பூர் – திருச்சி இடையே சிறப்பு ரயில்கள் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் ஒப்புதல் பெறப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் இவ்வாறு அவர்கள் கூறினர்.
கன்னியாகுமரி சிறப்பு ரயில் இயக்கம்
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக உப்பள்ளி-கன்னியாகுமரி சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07367) நாளை (திங்கட்கிழமை), அடுத்த மாதம் (ஜனவரி) 6 மற்றும் 13-ந்தேதிகளில் (3 பயணம்) உப்பள்ளியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 3.20 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.மறுமார்க்கமாக கன்னியாகுமரி – எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி சிறப்பு ரெயில் (07368) வருகிற 31-ந்தேதி, அடுத்த மாதம் 7, 14-ந்தேதிகளில் (3 பயணம்) கன்னியாகுமரியில்இருந்து இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7.35 மணிக்கு உப்பள்ளியை வந்தடையும்.

இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும், ஹாவேரி, ராணிபென்னூர், ஹரிகர், தாவணகெரே, பீரூர், அரிசிகெரே, துமகூரு, யஷ்வந்தபுரம், கே.ஆர்.புரம், பங்காருபேட்டை, சேலம் நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் இவ்வாறு அவர்கள் கூறினர்