Srilanka News
இராணுவம் மற்றும் கடற்படைக்கு புதிய தளபதிகள் நியமனம்!

இலங்கையின் 25 ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே நாளை(31) ஓய்வு பெறவுள்ளதையடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 24 ஆவது இராணுவத் தளபதியாகிய விக்கும் லியனகேக்கு கஜபாகு படையணியில் நேற்றைய தினம் அவருக்குப் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.
இதேவேளை, இலங்கையின் 26 ஆவது கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் தற்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நாளை ஓய்வு பெறவுள்ள நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.