
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்று(18) சில சபைகளுக்கான கட்டுப்பணத்தை யாழில் செலுத்தியுள்ளார்.
யாழிலுள்ள 17 சபைகளில் 11 சபைகளுக்கான கட்டுப்பணத்தை இதுவரை அவர் செலுத்தியுள்ளார்.
வேலணை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு,காரைநகர் மற்றும் வலி தெற்கு, வலி மேற்கு ஆகிய சபைகளுக்கு நாளை கட்டுப்பணம் செலுத்தப்படும் எனவும் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.