NewsPoliticsSrilanka News
அஸ்வெசும கொடுப்பனவு மேலும் நான்கு இலட்சம் குடும்பங்களுக்கு!

அஸ்வெசும கொடுப்பனவை மேலும் 4 இலட்சம் குடும்பங்களுக்கு அடுத்த மாதம் முதல் வழங்கவுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றம் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார்.
பயனாளிகளை தெரிவு செய்யும் நடவடிக்கைகள், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சர் கூறினார்.
420,000 இடைநிலை குடும்பங்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவு கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியில் தற்போது 138,000 குடும்பங்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.