மேல் கொத்மலை நீர் தேக்கத்தில் காணாமல்போன சிறுவனின் சடலம் மீட்பு!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல் போன நான்கு வயது சிறுவனின் சடலம் இன்று (17) நீர்த்தேக்கத்தின் அடிப்பகுதியிலிருந்து மீட்க்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை தேவ்சிறிபுர பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 4 வயது மகன் தனுஷனுடன் நேற்று (16) மாலை தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் தற்கொலை செய்யும் நோக்கில் குதித்துள்ளார்.
அதை அவதானித்த இளைஞர் ஒருவர் நீர்த்தேக்கத்தில் குதித்து பெண்ணை மீட்டுள்ளார்.
மீட்க்கப்பட்ட பெண், சிகிச்சைக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் சிறுவனின் சடலம் இன்று மீட்க்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் நுவரெலியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குடும்பத் தகராறு காரணமாக தானும் தனது குழந்தையும் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் நீர்த்தேக்கத்தில் குதித்ததாக பெண் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.