
இந்தியா – ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடந்த 2 பார்டர் – கவாஸ்கர் கோப்பைகளை வென்று அசத்திய இந்திய அணி, இம்முறையும் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரை நம்பிக்கையுடன் தொடங்கியது. இருப்பினும் 2-வது மற்றும் 4-வது போட்டியில் தோல்வியை தழுவியது. மழை காரணமாக 3-வது போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்ற 3-வது
டெஸ்ட் சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் கோப்பையை தக்கவைக்க கடைசி போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற இக்கட்டான சூழலில் இந்தியா விளையாட உள்ளது.
தொடரும் தோல்வி… சிக்கலில் காம்பிர் * நாளை ஐந்தாவது டெஸ்ட் துவக்கம்
பயிற்சியாளர் காம்பிர் தலைமையிலான குழுவினர், ஆஸ்திரேலிய அணியின் வலிமையான பவுலிங் தாக்குதலை சமாளிக்கும் வகையில், சரியான இந்திய ‘லெவன்’ அணியை கண்டறிய முடியாமல் தவிக்கின்றனர்.

ஏற்கனவே, இலங்கை ஒருநாள் தொடரில் தோற்ற இந்தியா, சொந்த மண்ணில் நியூசிலாந்து டெஸ்ட் தொடரை இழந்தது. தற்போது தொடரை இழக்கும் அபாயத்தில் இருந்து தப்பவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை தக்க வைக்கவும், சிட்னி டெஸ்டில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் உள்ளது.
ஆனால், மைதானத்தில் ஏற்பட்ட தோல்விகள் காரணமாக, களத்துக்கு வெளியில் அணிக்குள் சில குழப்பம் நிலவுவதாக தெரிகிறது. ரவி சாஸ்திரி, டிராவிட் பயிற்சியாளர்களாக இருந்தது போல இல்லாமல், தற்போது வீரர்கள் ‘டிரசிங் ரூமில்’ ஒருவருக்கு ஒருவர் சரியாக பேசிக் கொள்வது இல்லை.கேப்டன் ரோகித் சர்மா, அணித் தேர்வு குறித்து வீரர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசுகிறார். ஆனால், கடந்த ஜூலை மாதம் காம்பிர் பொறுப்பேற்ற பின், ஜூனியர் அல்லாத வீரர்கள், சில நேரங்களில் அணியில் இருந்து ஏன் நீக்கப்படுகின்றனர் என்ற விபரம், ரோகித்திடம் தெரிவிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.

ரோகித்தின் மோசமான பார்மும், அவருக்கு எதிராக உள்ளது. அணியின் உறுதியான நபர் என கருதப்படும் காம்பிர், ரோகித், கோலி போன்ற வீரர்களின் நம்பிக்கையை பெறவில்லை எனத் தெரிகிறது. தவிர, ஆஸ்திரேலிய தொடரில் புஜாரா வேண்டும் என்ற காம்பிர் கோரிக்கையை, தேர்வுக்குழு தலைவர் அகார்கர் ஏற்க மறுத்துள்ளார்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு நிர்வாக ஒருவர் கூறுகையில்,” சிட்னி டெஸ்ட், அடுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரவுள்ளது. இதில் சிறப்பாக செயல்படவில்லை என்றால் காம்பிரின் பயிற்சியாளர் பதவிக்கு சிக்கல் ஏற்படும்,” என்றார்.