
உலக சமாதானம் வேண்டி ஜந்து நாடுகளின் பௌத்த மத குருமார்கள் இணைந்து முன்னெடுத்துள்ள பாத யாத்திரை இன்று(06) யாழ்.சாவகச்சேரியை வந்தடைந்தது.
கடந்த மாதம் மாத்தறை திஸ்ஸ மஹாராம விகாரையில் இருந்து ஆரம்பித்த பாதயாத்திரிகை சாவகச்சேரி நகரை வந்தடைந்துள்ளது.
மியான்மார், பர்மா, தாய்லாந்து, இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த பெளத்த குருமார்களே இந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.
சாவகச்சேரி வந்தடைந்த யாத்திரைக் குழுவினரை, சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.
இந்த பெளத்த குருமார்கள் இன்றிரவு நாவற்குழி சுமணதிஸ்ஸ விகாரையில் தங்கி நாளை நயினாதீவு நாகவிகாரையை சென்றடைந்து யாத்திரையை நிறைவு செய்யவுள்ளனர்.