NewsSrilanka NewsTravel

அதிவேக வீதிகளில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்தலாம்!

இலங்கையில் அதிவேக வீதிகளில் வங்கி அட்டைகள் ஊடாக கொடுப்பனவுகளை செலுத்தும் வசதி இன்று(21) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

தெற்கு அதிவேக வீதி, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி மற்றும் மத்திய அதிவேக வீதியின் குருநாகல், மீரிகம ஆகிய பகுதிகளில் வங்கி அட்டைகள் மூலம் கொடுப்பனவுகளை செலுத்த முடியும் என துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள், போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

35 இடமாறல்கள் மற்றும் 119 வௌியேறல் பகுதிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக அதிவேக வீதிகளில் கொடுப்பனவு நடவடிக்கைகளின் போது ஏற்படும் வாகன நெரிசல்களை குறைப்பதனூடாக பணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதத்தை குறைத்துக்கொள்ள முடியுஊமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button