EventsNews

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம்

கடலூர்: உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்று விழா நடந்தது. வரும் 12-ம் தேதி ஞாயிற்றுகிழமை தேர் திருவிழாவும், 13-ம் தேதி திங்கள்கிழமை மார்கழி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுகிறது.

சைவத் திருத்தலங்களின் முதன்மையான சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனம் ஆகிய இருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம் இன்று (ஜன.4) காலை 6.15 மணியில் இருந்து 7 மணி வரை நடைபெற்றது. உற்சவ ஆச்சாரியார் சிவராஜ தீட்சதர், மேளதாளங்கள் முழங்க தேவாரம் திருவாசகம் ஓதிட, வேத மந்திரங்கள் முழங்கிட கோயில் கொடிமரத்தில் கொடியேற்றினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பஞ்சமூர்த்தி கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்தது.

முன்னதாக கொடியேற்றத்தை முன்னிட்டு சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சாமிகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து நாளை (ஜன.5) சுவாமிகள் வெள்ளி சந்திர பிரபை வாகனத்தில் வீதிஉலா, 6-ம் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா, 7-ம் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா, 8-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், 9-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலாவும், 10-ம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும், 11-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாடனார் வெட்டுக்குதிரையில் வீதிஉலாவும் நடைபெறுகிறது.

              Advertisement            

நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன கொடியேற்றம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.அன்றைய தினம் காலை நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் தேரில் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து நான்கு வீதிகள் வழியாக இழுத்து செல்வர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button