JaffnaSri Lanka

மண்ணெண்ணை குடித்ததால் குழந்தை மரணம்!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் குடித்ததால் உயிரிழந்துள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று(09) இடம்பெற்றுள்ளது. கோப்பாய் மத்தி, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தர்சிகன் சஸ்வின் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், தாயார் சமையல் செய்துகொண்டு இருந்தவேளை குறித்த குழந்தை மண்ணெண்ணெயை எடுத்து குடித்துவிட்டு, உடலிலும் பூசி விளையாடிக்கொண்டிருந்ததது. இதை அவதானித்த தாயார் குழந்தையை தூக்கினார். அப்போது குழந்தை சோர்வடைந்துள்ளது.

              Advertisement            

பின்னர்  கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பிற்பகல் 4 மணியளவில் குழந்தை உயிரிழந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button