NewsSrilanka News
சீனாவின் சகோதர பாசம்’ உதவித்திட்டம் யாழ்ப்பாணத்தில்!

சீனாவின் சகோதர பாசம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி ‘சூ யன்வெய்’யால் இன்று(10) (Zhu Yanwei) வழங்கி வைக்கப்பட்டது.
யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலாளர் ம. பிரதீபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், சீன தூதரகத்தின் உயரதிகாரிகள், பிரதேச செயலகர்கள், துறைசார் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின்போது 1070 குடும்பங்களுக்கு தலா 6490 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.