Srilanka News
குற்றச் செயலில் ஈடுபடும் பத்துக் குழுக்களுடன் பல அரசியல் வாதிகளுக்கு தொடர்பு!

போதைப்பொருள் உள்ளிட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 10 குழுக்களுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்புள்ளமை தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
குற்றச்செயல்களை தடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று (20) நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 10 குழுக்களுடன் தொடர்புபட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.