NewsReligionSrilanka News
உகந்தையில் வைக்கப்பட்ட புத்தர் சிலையால் சர்ச்சை!

அம்பாறை மாவட்டம் உகந்தைமலை முருகன் ஆலய கடற்கரை சூழலிலுள்ள குன்றில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தை மலை ஆலய தீர்த்தக் கடற்கரையில் கடற்படை முகாமுக்கு அருகிலுள்ள குன்றிலேயே குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு பௌத்த கொடியை பறக்க விடப்பட்டுள்ளமையும் கடுமையான எதிர்ப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயம், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.