EducationNewsSrilanka News

புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளிகள்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று (23) வௌியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது மாவட்ட ரீதியான வெட்டுப் புள்ளிகளையும் பரீட்சைகள் திணைக்களம்  வெளியிட்டுள்ளது.

அதன்படி, அதிகபட்ச வெட்டுப்புள்ளி 143 ஆகவும், குறைந்தபட்ச வெட்டுப்புள்ளி 130 ஆகவும் காணப்படுகின்றது.

கொழும்பு மாவட்டத்தின் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி 141 ஆகவும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி 143 ஆகவும் உள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 139 ஆக உள்ளது.

மன்னார் மாவட்டத்தின் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி 138 ஆகவும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி 130 ஆகவும் உள்ளது.

மேலும். வவுனியா மாவட்டத்தின் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி 139 ஆகவும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி 130 ஆகவும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button