EventsJaffnaSrilanka News
ஏ 9 வழியாக நடனம்” சைக்கிள் ஓட்டப் போட்டி!
ரேஸ் தி பேர்ல் ( Race the pearl) அமைப்பின் “ஏ 9 வழியாக நடனம்” எனும் தொனிப் பொருளில் சைக்கிள் ஓட்டப்போட்டி இன்று(07) காலை யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமானது.
இதற்கான ஆரம்ப நிகழ்வு யாழ்.நகரில் பண்பாட்டு நடனத்துடன் இடம்பெற்றது.
ஏழாவது வருடமாக இடம்பெறும் இந்த சைக்கிள் ஓட்டப் போட்டி, யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பித்து திக்வல்லவில் நிறைவடையவுள்ளது.
100 நகரங்களை இணைக்கும் இந்த சைக்கிள் ஓட்ட போட்டியில், 600 கிலோ மீற்றர் தூரத்தை வீரவீராங்கனைகள் கடக்க உள்ளனர்.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.