Cinema

கேம் சேஞ்சர் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.. படத்திற்காக நடிகர் ராம் சரண் வாங்கிய சம்பளம்..இதோ

கேம் சேஞ்சர்

தெலுங்கில் தயாரான ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு ராம் சரண் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் கேம் சேஞ்சர்.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், சுனில் என பலர் நடித்துள்ளனர்.

ரூ. 450 கோடி பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது, இந்த படத்தில் ஒரு பாடலுக்கு மட்டுமே ரூ. 95 கோடி செலவு செய்திருக்கிறார்கள்.

சம்பளம்

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த படத்திற்காக ராம் சரண் கடின உழைப்பை போட்டுள்ளார். அதற்கு ஏற்ற பலனாக ரசிகர்களும் படத்தை கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ராம் சரண் இந்த படத்திற்காக ரூ. 65 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம்.. 

இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 

இந்தியன் 2 படத்தில் விட்டதை கண்டிப்பாக கேம் சேஞ்சர் படத்தில் இயக்குநர் ஷங்கர் பிடித்துவிடுவார் என எதிர்பார்த்த நிலையில், இப்படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை என்கின்றனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. சிலர் இப்படத்தின் மீது கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button