World

விளையாட்டு வீராங்கனைகள் பலி – மின்னல் தாக்கியதால்!

கொலம்பியா நாட்டில், மின்னல் தாக்கி நான்கு கால்பந்து விளையாட்டு வீராங்கனைகள் பலியான துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கொலம்பியா நாட்டிலுள்ள Cajibio என்னுமிடத்துக்கு அருகிலுள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் பெண்களுக்கான கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்திருக்கிறது. அப்போது திடீரென இடியுடன் மழை பெய்யவே, சில பெண்கள் ஓடிச் சென்று மரம் ஒன்றின் கீழ் தஞ்சம் புகுந்துள்ளார்கள்.

மரத்தை மின்னல் தாக்க, நான்கு விளையாட்டு வீராங்கனைகளும், ஒரு ஆணும் உயிரிழந்துள்ளார்கள். மேலும் இரண்டு பெண்கள், படுகாயத்துடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளார்கள். உயிரிழந்த விளையாட்டு வீராங்கனைகளின் பெயர்கள் Jeidy Morales, Daniela Mosquera, Luz Lame மற்றும் Etelvina Mosquera என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், துயரத்தையும் உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button