NewsWorld

ஜஸ்டின் ட்ரூடோவை கிண்டலடித்த எலான் மஸ்க்.. அமெரிக்கா – கனடா இணைப்பு சர்ச்சை.

அமெரிக்க அதிபராக எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்கிறார். கனடாவை அமெரிக்காவின் 51 வது மாகாணமாக இணைக்க முனைப்பு காட்டி வரும் டிரம்ப் அதற்காக அந்நாட்டின் மீது பொருளாதார அழுத்தத்தை கொடுப்பேன் என்றும் அச்சுறுத்தியுள்ளார். அமெரிக்கக் கொடியால் வரையப்பட்ட இரு நாடுகளின் ஒருங்கிணைந்த வரைபடத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ‘கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வாய்ப்பில்லை’ என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த எக்ஸ் பதிவிற்கு எலான் மஸ்க் கிண்டலாக பதில் அளித்துள்ளார். அதில், “பெண்ணே, இனிமேல் நீங்கள் கனடாவின் கவர்னராக இருக்க போவதில்லை. ஆகவே நீங்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

              Advertisement            

கனடா பிரதமராக கடந்த 9 ஆண்டுகள் பதவி வகித்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜநாமா செய்யப்போவதாக ஜனவரி 6-ல் அறிவித்தார். புதிய லிபரல் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் போது பதவியை ராஜநாமா செய்வதாக அவர் அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button