
“பரீட்சையை மகிழ்ச்சிகரமாக எதிர்கொள்வோம்” என்ற தொனிப்பொருளில் வெண்கரம் அமைப்பால் நடாத்தப்பட்ட க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தமிழ் மொழிப்பாடச் செயலமர்வு கிளிநொச்சி,பூநகரி, வேரவில் இந்து மகா வித்தியாலயத்தில் நேற்று(10) இடம்பெற்றது.
பூநகரி கிராஞ்சி அ.த.க.பாடசாலை,வலைப்பாடு றோ.க.த.க.பாடசாலை,வேரவில் இந்துமகா வித்தியாலயம், ஆகிய பாடசாலை மாணவர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
வேரவில் இந்து மகாவித்தியாலய முதல்வர் த.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வெண்கரம் அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் மு.கோமகன், வலைப்பாடு புனித அன்னம்மாள் ஆலய பங்குத் தந்தை இரேனியஸ், வலைப்பாடு றோ.க.த.க. பாடசாலை உப அதிபர் திருமதி மதுரநாயகம், ஜெகமீட்பர் சனசமூகநிலைய தலைவர் ஜீவசஜனிக்குமார், செயலாளர் கி. செல்வக்குமார், பொருளாளர் செ.அல்பினஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வளவாளராக வெண்கரம் அமைப்பின் செயற்பாட்டாளரும், வட மாகாண முன்னாள் உதவிக்கல்விப்பணிப்பாளர் கௌரி முகுந்தன், சு.சண்முகேந்திரன்சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.