
யாழ்.செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணி நாளை(15) இடம்பெறவுள்ளது.
கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் செம்மணி பகுதியிலுள்ள சிந்துபாத்தி இந்து மயான அபிவிருத்திப் பணிக்காக குழிகள் வெட்டியபோது அதற்குள் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.
இது தொடர்பாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டு அமைய, விடயத்தை பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றதைத் தொடர்ந்து பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி சம்பவ இடத்தில் நீதவான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
இதன்போது, மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாகவே,
துறைசார் வல்லுநர் பேராசிரியர் சோமதேவ தலைமையில் இந்த ஆய்வுப் பணிகள் இடம்பெறவுள்ளன.
பேராசிரியர் சோமதேவ கடந்த மூன்றாம் திகதியன்று மனித எச்சங்கள் அவதானிக்கப்பட்ட இடத்தில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.