NewsSrilanka News
தேசபந்து தென்னகோனுக்கு 3 ஆம் திகதிவரை விளக்கமறியல்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நேற்று (20) உத்தரவிட்டிருந்தார்.
முன்னர், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை (19) நகர்தல் பத்திரம் மூலம் சரணடைந்ததை தேசபந்து தென்னக்கோன் நேற்றுவரை (20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்ட போது தேசபந்து தென்னகோனை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.