NewsSrilanka News
நீதிமன்றில் ஆஜரான தேசபந்துவிற்கு நாளைவரை விளக்கமறியல்!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று(19) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் மூலம் ஆஜரான தேசபந்து தென்னகோனை நாளை வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது பிணை கோரிக்கை குறித்த முடிவு நாளை வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.