NewsSrilanka News
துசிதவுக்கு நாளை வரை விளக்கமறியல் நீடிப்பு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ நாளை வரை( 6) தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று(04) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தேசிய லொத்தர் சபை முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ, 2017–2019 காலகட்டத்தில், தேசிய லொத்தர் சபையிடமிருந்து பெறப்பட்ட ரூ.470,000 க்கும் அதிகமான மதிப்புள்ள கணினி மற்றும் மொபைல் தொலைபேசியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 2025 மே 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.