
இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைமடி மீன்பிடியை வெளிக்கொணரும் ஆவணப்படம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் ஒப்படைக்கப்படுவதற்காக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கையளிக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட குறித்த ஆவணப்படம் இன்று(17) யாழ்ப்பாணம் கந்தர்மடத்திலுள்ள தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் கடற்றொழில் அமைச்சரிடம், கடற்றொழில் அமைப்பின் பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டது.
இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைமடி மீன்பிடியால் கடல் வளங்கள் பாதிக்கப்படுவதோடு பல இலட்சக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளமை போன்ற விடயங்கள் ஆவணப்படத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.