முதல் ஒருநாள் போட்டியில் கம்பீர் வைத்த டிவிஸ்ட் – ரிஷப் பண்ட் நீங்க தேவையில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவனில்(11) அடுத்தடுத்து இருக்கிறது. நாக்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர், முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதை தொடர்ந்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா தாங்களும் முதலில் பந்துவீச தான் இருந்தோம் என்று கூறினார். இந்த சூழலில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி காயம் காரணமாக இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் அணியில் இடம் பிடித்திருக்கிறார்.

இதைப் போன்று ஹர்ஷித் ரானாவும் வேகப்பந்து வீச்சில் அறிமுகமாக இருக்கிறார். கேப்டன் வழங்கிய டீம் சீட்டில் கில்லின் பெயர் நான்காவது இடத்தில் இருந்தது. இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் நடுவரிசையில் இறங்க அதிக வாய்ப்பு இருக்கிறது என கூறப்படுகிறது.
இதே போன்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மன் ஆன ரிஷப் பன்ட் ஒரு நாள் அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடரில் கே எல் ராகுல் தான் விக்கெட் கீப்பிங் பணியை செய்ததால், அவருக்கு இந்த முன்னுரிமை வழங்கப்பட்டு

அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே அணியில் ஜெய்ஸ்வால், அக்சர் பட்டேல், ஜடேஜா போன்ற மூன்று இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் நான்காவதாக ஒரு இடது கை பேட்ஸ்மேன் தேவையில்லை என்ற முடிவை கம்பீர் எடுத்து இருக்கிறார். பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குல்தீப் யாதவ்க்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இருக்கிறது.
இடது கை சுழற் பந்துவீச்சாளர்களான அக்சர் பட்டேல், ஜடேஜா என இருவருமே அணியில் இருக்கிறார்கள். இதேபோன்று ஆர்ஸ்தீப் சிங்கிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமி ஒரு நாள் அணியில் இடம் பிடித்திருக்கிறார்.