
நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள குறைபாடுகள் தொடர்பாக இன்று(19) ஆராய்ந்தார்.
விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே நாடாளுமன்ற உறுப்பினர் இன்று அங்கு விஜயம் செய்திருந்தார்.
இதன்போது போருந்து நிலையத்தில் மக்கள் எதிர்நோக்கும் சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் வசதிகளோடு அமைக்கப்படுவரும் மலசல கூடத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் பார்வையிட்டார்.