NewsWeatherWorld

நுவரெலியாவி்ல் தொடர் மழை இயல்புநிலை பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று(18) மாலை முதல் தொடர்ந்து பெய்துவரும் மழை  காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும்  பண்ணையாளர்கள் இதனால்  பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்.

உடப்புசல்லாவ பிரதான வீதியில் கந்தபளை புதிய வீதி பகுதியில் வெள்ள நீர் வீதியைக் கடந்து செல்வதனால்  போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து மழை பெய்து வருவதால் சிவனொளி பாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.


மலை உச்சியில் இருந்து படிக்கட்டுகளில் மழை நீர் வடிந்தோடுவதால் தொடர்ந்து பயணிப்பில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அதிகளவான உள்நாட்டு, வெளிநாட்டு யாத்திரிகர்கள் மலைக்கு சென்று தரிசனம் செய்துவருவதைக் காணமுடிகிறது.

இதேவேளை, நீர் தேக்கங்களின் நீர் மட்டங்கள் உயர்ந்து வருகின்றன. மவுசாகல, மேல் கொத்மலை, காசல்ரீ, கென்யோன், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல மற்றும்  விமலசுரேந்திர ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டங்கள் உயர்வடைந்து வருகின்றன.

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் பணி மூட்டமாகக் காணப் படுகிறது. 

குறிப்பாக மஸ்கெலியா நோட்டின்,நோட்டன் பிரிட்ஜ் கினிகத்தேன.ஏ7 வீதி மற்றும் மஸ்கெலியா ஹட்டன் வீதியில் அதிக அளவில் பணி மூட்டம் காணப் படுகிறது. இதனால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button