இலங்கைச் சந்தையில் தரமற்ற உரம்: விசாரணைகள் ஆரம்பம்!

இலங்கைச் சந்தையில் தரம் குறைந்த உரம் காணப்படுகிறதா என்பதைப் கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை பகுதியில் தரம் குறைந்த உரம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டமையை அடுத்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவகே குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட உதவிப் பணிப்பாளர்களின் ஊாடாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொலன்னறுவை, சிறிபுர பகுதியிலுள்ள களஞ்சியசாலையொன்றிலிருந்து 1,565 யூரியா உர மூட்டைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
குறித்த உர தொகையின் மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவகே குறிப்பிட்டுள்ளார்.
குறித்த உர மோசடி தொடர்பாக 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.