
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், கொழும்பு இந்துக் கல்லூரிக்கு இடையிலான சொல்லாடல் விவாதச் சமர் நேற்று(07) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது.
இந்த வாதச் சமரில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணி வெற்றி பெற்றது.
“ஈழமணித் திருநாட்டிலே தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாட இடர்களுக்கு பெரிதும் காரணமாக இருப்பவர்கள் அரச ஊழியர்களைக் காட்டிலும் அரசியல்வாதிகளே/ இல்லை என்ற தலைப்பில் சொல்லாடல் இடம்பெற்றது.
இதன் போது இரு கல்லூரி மாணவர்களும் வாதச் சமரில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் கல்லூரிகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.