
யாழ்.மாவட்டத்திற்கு வருகைதந்துள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும், வல்வெட்டித் துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும், தென்மராட்சி மிருசுவிலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் பங்கேற்றார்.
யாழ்.மாவட்ட செயலகம்
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று(31) காலை 10 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு வகையான பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது.


போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், திணைக்கள தலைவர்கள், முப்படைகளின் பிரதிநிதிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், துறைசார் அதிகாரிகள், என பலரும் கலந்துகொண்டனர்.
வல்வெட்டித்துறை
அதனைத் தொடர்ந்து வடமராட்சி வல்வெட்டித்துறை கடற்கரையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டார்.




மிருசுவில்
இறுதியாக தென்மராட்சி மிருசுவில் துர்க்கை அம்மன் ஆலயம் மூன்றலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.



