NewsWorld

சவுதி அரேபியா அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை!

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழலில் நிலவி வரும் நிலையில், சவுதி அரேபியா வெளியுறவுத்துறை இணை அமைச்சருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவுப் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியாவும் ஒபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்திருந்தது.இதனால், இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில், திடீர் விஜயம் மேற்கொண்டு இந்தியா வந்துள்ள சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்-அல்ஜுபைர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், “பயங்கரவாதத்தை இந்தியா எதிர்க்கும் விதம் குறித்து சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்-அல்ஜுபைர் உடன் ஆலோசனை நடத்தினேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button