கொட்டாஞ்சேனை மாணவி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகியுள்ளார்- பொலிஸார் தெரிவிப்பு!

தற்கொலை செய்தசெய்து கொண்ட கொழும்பு-கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பம்பலப்பிட்டியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
சிறுமி துஷ்பிரயோகத்துக்கு ஆளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாகவும், சந்தேகநபரான ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்துவந்த 16 வயது மாணவி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருந்தார்.
சம்பவத்தை அடுத்து மே 4 ஆம் திகதி மாணவியின் பெற்றோர், ஊடக சந்திப்பை நடத்தி, பாடசாலை ஆசிரியர் மற்றும் மேலதிக ஆசிரியரின் செயல்களே அவரது மரணத்திற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியிருந்தனர்.
அதன்படி, மாணவியின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்தக் கோரி, கடந்த மே 8 ஆம் திகதி கொழும்பில் மூன்று இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில்,இந்த சம்பவம் குறித்த வழக்கு மே 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.